Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 20 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்
யோகாப் பயிற்சியை நடைமுறைப்படுத்துமாறு கூறி சுற்றுநிரூபத்தை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பினால், சகல பாடசாலைகளும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன்; தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று காலை மட்டக்களப்பு ஆரோக்கிய கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பாடசாலை மட்டத்தில் யோகாப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பாடசாலைகளில் இப்பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
'சிங்களப் பாடசாலைகளில் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதால், அங்கு இந்த யோகாப் பயிற்சி இல்லை. ஆனால், அனைத்துப் பாடசாலைகளிலும் யோகாப் பயிற்சியை முன்னெடுத்தால், இளம் சமுதாயத்துக்கு மிகவும் நன்றாக இருக்கும்' என்றார்.
'மேலும், இங்குள்ள தமிழ்ப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சியை செயற்படுத்துவதற்கான வடிவத்தை நாங்கள் உருவாக்க முடியும்.
'அறநெறிப் பாடசாலைகளிலும் கட்டாயமாக யோகாப் பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சிலிருந்து சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
'2015ஆம் ஆண்டு நான் இந்த அமைச்சுக்கு வந்தபோது, முதன்முதலாக யோகாப் பயிற்றுவிப்பாளர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இந்தப் பயிற்சி எப்படி நடக்கின்றது, இதன் மூலம் என்ன நன்மை உள்ளது என்றெல்லாம் கேட்டறிந்தேன்.
'உடலையும் உளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதற்கும் யோகாப் பயிற்சி உதவுகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
18 minute ago
32 minute ago