Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எஸ்.எம்.அறூஸ் / 2018 மே 28 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலவிதமான முரண்பாடுகள்? கருத்து வேறுபாடுகள் இருக்கிற நிலையிலும், உச்சக்கட்ட சகிப்புத் தன்மையை பேணுவதற்கான பயிற்சியை வழங்குகிற ஒரு மாதமாக, ரமழான் மாதம் விளங்குகிறது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குறிப்பாக, மற்ற சமூகங்களிலிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டுகின்ற முக்கியமான குணவியல்புகளை வளர்த்துக் கொள்வதற்கான நல்ல படிப்புகளையும், ரமழான் மாதம் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு, நேற்று (27) ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “ரமழான் மாதம் என்கின்றபோது, எங்களைப் பண்படுத்திக் கொள்வதற்கும், எங்கள் மத்தியிலிருக்கிருக்கின்ற நற்பண்புகளைச் சீர்படுத்திக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.
“இஸ்லாம், ஈகைப் பண்பு எனும் எங்களுடைய செல்வத்திலிருந்து அளவிட்டு, ஏழை மக்களுக்குக் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கிற ஒரு மார்க்கம்.
“புனிதமான இந்த ரமழான் மாதம், நல்ல படிப்புகளை உள்ளடக்கிய மாதமாக இருப்பது மாத்திரமல்ல, எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, ஏனைய எல்லோரும் எதிர்பார்க்கின்றவாறு உச்சக்கட்டத்தன ஆன்மீகப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருக்கின்ற ஒரு நிலைமையில், நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago