Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 14 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பத்தில், தனது சகோதரர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி தாங்காது, அவருடைய இன்னாரு சகோதரர் உயிரிழந்த துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், சில ஆண்டுகளுக்கு முன்னர், அரவம் தீண்டி உயிரிழந்திருந்த நிலையில், அக்குடும்பத்தின் சோகம் நீள்கிறது.
வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் லோகிதராணி தம்பதியினரின் குடும்பத்திலேயே, இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தம்பதியினருக்கு ஏழு பிள்ளைகள். அதில் இரண்டாவது மகளான மோகனராணி (வயது 16) என்பவர், உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தபோது 1996ஆம் ஆண்டு, அரவம் தீண்டியதில் மரணமடைந்தார்;.
அதன் பின்னர், அவரது தங்கையான ஷர்மிகா (வயது 9) என்பவரும், அரவம் தீண்டியதில் 2001ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இவ்வாறிருக்கையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் லோகிததரன் (வயது 23) என்பவர், கடந்த வியாழக்கிழமை (8) தமது மாடுகளை பராமரிக்கச் சென்ற நிலையில், இரவு ஒன்பது மணியாகியும் வீடு திரும்பவில்லை.
இவரைத் தேடி அவரது சகோதரரான மோகனதரன் (வயது 28) என்பவர் மாடுகள் கட்டப்படும் இடத்துக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது லோகிததரன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில், துயரம் தாங்காது மோகனதரனும், மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர், உடனடியாக வாகரை மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (13), சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago