2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சட்டவிரோதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக குழுக்களை நியமிக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரில் அதிகரித்துக் காணப்படும் கலாசாரச் சீரழிவு உட்பட சட்டவிரோதச் செயற்பாடுகளைக் ஒழித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இளைஞர், யுவதிகளைக் கொண்ட குழுக்களை நியமிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா பணித்துள்ளார்.

சட்ட உதவி ஆணைக்குழு, சூரியா பெண்கள் அமைப்பு, சமுதாயச் சீர்திருத்தப் பிரிவு, சிறுவர் நன்னடத்தைப் பிரிவு ஆகியவற்றுக்கே இன்று திங்கட்கிழமை நீதவான் இவ்வாறு பணித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம், போதைவஸ்துப் பாவனை,  பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை நகரில்
அதிகரித்துக் காணப்படுகின்றன. இச்செயற்பாடுகளை ஒழிப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X