2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு எழுவர் கைது

பேரின்பராஜா சபேஷ்   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன் குமாரவெளி ஆற்றில், இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட  ஏழு உழவு இயந்திரங்கள், இழுவைப்பெட்டிகள் சகிதம், நேற்று (29) விசேட அதிரடிப்படையினரால், கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, கைதுசெய்யப்பட்ட சாரதிகள் ஏழுபேரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனனர் என்றும் எனினும், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை,  முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .