2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத மணல் கடத்தல் ; ஒருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில்,  சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும், அதற்காக அவர் பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் மீட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர், கொக்கட்டிச்சோலையில் இருந்து காத்தான்குடிக்கு மண்ணை கடத்த முற்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரயின் பணிப்புரையின் கீழ், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜெயசீலன்  தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போது, இன்று (26) அதிகாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர்கள் மற்றும் மணல் ஏற்றிய டிப்பர் வாகனம், இயந்திரங்கள் என்பன, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .