2025 மே 03, சனிக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி; நால்வர் கைது

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மட்டு. வாவியின் தம்பலவற்றை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான வகையில் மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர், வெல்லாவெளிப் பொலிஸாரால் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளிப் பிரதேச நீரியல் வள பரிசோதகர் கே.தர்சனன், வெல்லாவெளிப் பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே, மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக ரங்குஸ், இழுவை வலைகளைப் பயன்படுத்தி, சிறிய மீன் இனங்கள்  அழிக்கப்பட்டு வருவதாக, அப்பிரதேச மீன்பிடிச் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X