2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 வாத்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ், மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால், 110 வர்த்தக நிலையங்கள் இந்நடவடிக்கையின் போது சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

போலியான நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பாவித்தல், சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இருநாட்களாக  முழுநாளும் மட்டக்களப்பு நகரம், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, கொக்கடிச்சோலை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பழக்கடைகள், நகைக்கடைகள், மீன் விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள் உட்பட் பல வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டன.

களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் இவர்கள்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .