2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோதச் செயற்பாடுகள்; ‘கண்டுகொள்ளாமல் விடுதல் தவிர்க்கப்பட வேண்டும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி போன்ற விடயங்கள் சில சில பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவெனவும் இவைகள் கண்டுங்காணாமல் விடப்படுகின்றனவெனவும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் ஜீ.சிறிநேசன் குற்றஞ்சாட்டினார்.

இந்த சட்டவிரோதமான செயற்பாடுகள் கண்டுங் காணாமல் சில பிரதேசங்களில்  நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனரெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “மண் வியாபாரம், கடத்தல், மரக்கடத்தல், கால்நடைகள் சட்டவிரோத கொண்டு செல்லப்படல், சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி போன்ற விடயங்கள் சில சில பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” என்றார்.

மேலும், இவற்றுக்கெதிராக சில செயற்பாடுகளைக் கொண்டு செல்லுகின்ற அதேவேளைகளில், பொலிஸ்த் துறையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினர் பங்களிப்புச் செய்து, இந்த மாவட்டத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X