2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு

கனகராசா சரவணன்   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, கிரான் குடும்பிமலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 இலச்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை,  நேற்று (09) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸார் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்கள் தப்பியோடியுள்ளனர்.

எனினும், வெட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்வதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X