Gavitha / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எஸ் பாக்கியநாதன்
'சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு' என்னும் கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு கூரப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 1990.09.09. அன்று 186பேர் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நேற்று வெள்ளிக்கிழமை (09) நினைவு கூரப்பட்டது.
முன்னதாக பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் இந்தப் பூஜையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தமது படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் கவனயீர்ப்பு பேரணியும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகச்சுடரும் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம் உட்பட உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, சர்வதேச விசாரணையை கோரி மனித உரிமை அமைப்புக்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
சத்துருக்கொண்டானில் நடைபெற்ற படுகொலையில் 5 கைக்குழந்தைகள் 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85 பெண்கள் 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









28 minute ago
30 minute ago
38 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
38 minute ago
47 minute ago