2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சொந்த வீட்டில் தங்கம் திருடிய இளைஞன் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 16 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞன் ஒருவன் உட்பட மூவர் வெள்ளிக்கிழமை (21) அன்று கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான 18 வயதுடைய இளைஞன் தாய் தந்தை இழந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்க வைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்ததன்  பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞன் திருடியுள்ளதைக கண்டறிந்தனர்.

இதனையடுத்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை  குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் மற்றும்  திருடிய தங்க ஆபரணத்தை சட்டவிரோதமாக வாங்கிய  காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புகளை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதை காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள  நகைக்கடை ஒன்றில்  விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன் ஏனைய பணத்தில் உடைகள் வாங்கி  உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 வரையும்  வெள்ளிக்கிழமை அன்று  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து  எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X