2025 மே 14, புதன்கிழமை

சந்திவெளியில் பொதுநூலகம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளிப் பிரதேசத்தில், பொதுநூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சம்பிரதாயபூர்வமாக நேற்று (12) நடைபெற்றது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், தவிசாளரது பரிந்துரைக்கமைவாக, இவ்வேலைத்திட்டத்துக்கான 25 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .