2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சனசமூக நிலைய சம்மேளனத்தை உருவாக்க ஆலோசனை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போதுள்ள சனசமூக நிலைய வலயமைப்பை மேலும் வினைத்திறனுடன் இயங்க வைக்கும் நோக்கில், பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் சனசமூக நிலைய சம்மேளனத்தை உருவாக்கி, அதன்மூலம் மாதாந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கிழக்கு அபிவிருத்தி மைய திட்ட முகாமையாளர் ஜரீனா றபீக் தெரிவித்தார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் சமூக மட்ட அமைப்புகளைப் வலுவூட்டுவதன் ஊடாக, உள்ளூராட்சி மன்றங்களின் ஜனநாயக ஆட்சியை மேம்படுத்தல்” எனும் திட்டத்தின் கீழ், சன சமூக நிலையங்களை வலுப்படுத்தும் திட்டம் அமுலாவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச சபையின் கீழ் இயங்கும் சனசமூக நிலையங்களின் வலையமைப்புக் கலந்துரையாடல், பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (07) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு அபிவிருத்தி மையத்தின் அனுசரணையில் வாகரைப் பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாரூன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்,  பிரதேசத்தில் இயங்கும் சனசமூக நிலையங்களை வினைத்திறனுடன் செயலாற்றத்தக்க வகையில் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X