Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 17 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பிலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களை இந்த மாவட்டத்தில் நியமிப்பது தொடர்பிலும் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இந்த மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகள் சரியான முறையில் செயற்பட்டிருந்தால், இங்கு வறுமை வீதம் குறைவடைந்திருக்கும். கிரான் பிரதேசத்துக்கான சமுர்த்தி வங்கியில் 170 மில்லியன் ரூபாய் நிதி சேமிப்பில் உள்ளது எனவும் அவர் கூறினார்.
கோறளைப்பற்றுத் தெற்குப் (கிரான்) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது
இதன்போது, வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ்; சுயதொழில் கடன் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கிரான் பிரதேசத்துக்கான சமுர்த்தி வங்கி மூலம் 35 சதவீதம் மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளது. 170 மில்லியன் ரூபாய் நிதி அந்த வங்கியில் சேமிப்பில் உள்ளது என அப்பிரதேச அரசியல் பிரமுகர்களால் சுட்டிக்காட்டினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானப் பாவனை காரணமாகவும் நுண்கடன் காரணமாகவும் மக்கள் வறுமை நிலைமைக்கு மேலும் தள்ளப்பட்டுள்ளளனர்.
பொதுமக்களுக்குச் சமுர்த்தி சுயதொழில் கடன் சரியான முறையில் வழங்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு நுண்கடன் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. சுயதொழில் கடனுக்கு கிடைத்த நிதி நிலையான வைப்பில் உள்ளது. சமுர்த்தி உத்தியோகத்தர்களை இந்த மாவட்டத்தை விட்டு, வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்தால்; மாத்திரமே, இங்கு வறுமை ஒழியும்' என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில்,'சமுர்த்தி சுயதொழில் கடனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 80 சதவீதக் கடன் வழங்கப்பட வேண்டும். ஆனால், மாவட்ட ரீதியில் இதுவரையில் 53 சதவீத கடன் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழிப்பதற்காகவே சமுர்த்தி கொண்டுவரப்பட்டது. சரியான முறையில் செயற்படாமை காரணமாக மக்களுக்கு நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத் தற்கொலை செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில்; சமுர்த்தி சுயதொழில் கடன் வழங்கியது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து சுயதொழில் உதவி பெற்ற குடும்பங்களின் நிலைமையை அறிய வேண்டும்' என்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago