Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி யுதாஜித், கனகராசா சரவணன்
கிழக்கு மாகாணத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகும் சமூக அங்கிகாரம் இல்லாத தலைமைகள், வேட்பாளர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் சிரேஷ்டஉறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்குவதற்காக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில், இனவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, எமக்கான அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கு பாரிய மோசடியில் குறிப்பிட்ட சிலர், தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசவாதம், ஏனைய கொள்கை ரீதியான அரசியல் வேறுபாடு, தனிநபர் முரண்பாடு, கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் ஆகியனவற்றை முன்வைத்து, தனது சொந்த விடயங்களை பாதுகாப்பதற்காக அதிகார அரசியலுக்கு வந்து, கைக்கூலிகளாக, எமது சமூகத்தை விற்றுப்பிழைப்பதற்கு இவர் தேர்தலைத் தெரிவுசெய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்கள் சொந்த நலனை அமுல்படுத்துவதற்காக, பதவிகளை எடுத்துக்கொண்டு உலாவருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த விடயத்தில், சமூகநலன் இல்லாதவர்களை ஒதுங்கிக் கொள்ளுமாறும், ஒதுங்காத பட்சத்தில், மக்கள் தோற்கடிப்பார்கள்” எனவும் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago