2025 மே 19, திங்கட்கிழமை

சமையலறைக்கு வந்த யானையால் பாடசாலைக் கட்டடம் சேதம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டப் பிரிவிலுள்ள மண்டூர் 39ஆம் கொலனி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைச் சமையலறைக்கு வந்த காட்டு யானையால், பாடசாலைக் கட்டடம் சேதமாக்கப்பட்டுள்ளதென, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலைக்கு, செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த யானை, அங்கு சமையலறையில் மாணவர்களின் காலை உணவைத் தயாரிப்பதற்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அரிசி, உப்பு என்பனவற்றை உண்டு விட்டுச் சென்றுள்ளதாக, பாடசாலை அதிபர் ரீ. திருவருட்செல்வன் தெரிவித்தார்.

உண்பதற்காக, பாடசாலைச் சமையலறையைச் சேதமாக்கி விட்டே யானை உள்ளே நுழைந்துள்ளது.

39ஆம் கொலனியை அண்டியுள்ள காட்டுப் பகுதியில் நடமாடும் பெரும் எண்ணிக்கையிலான காட்டு யானைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் நுழைந்து உப்பு, அரிசி, நெல் போன்றவற்றை உண்டு வருவதாகவும் அதன் காரணமாக வீடுகள் செதமாக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X