2025 மே 01, வியாழக்கிழமை

சமையல் அறையில் தீ; இளம் குடும்பப் பெண் மரணம்

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எச்.. ஹுஸைன்

வீட்டில் சமையல் அலுவல்களில் ஈடுபட்டிருந்த வேளை மண்ணெண்ணெய் சிதறியதால் தீப்பற்றிக் கொண்ட 19 வயதான இளம் குடும்பப் பெண்ணொருவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி செவ்வாய்க்கிழமை (15) மாலை மரணித்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் குமாரவேலியார் கிராமத்தில் வசித்து வந்த புவனேசராஜா சலோமியா (வயது 19) என்ற இளம் குடும்பப் பெண்ணே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது, சம்பவ தினமான கடந்த  வெள்ளிக்கிழமை (11) சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த ஆடைகளில் தவறுதலாக மண்ணெண்ணெய் சிதறியுள்ளது.

அதனைப் பொருட்படுத்தாது, அவர் தீப்பெட்டியைக் கொளுத்தி, அடுப்பை எரிய வைத்தபோது, அது ஆடையில் பற்றிப் பிடித்ததால் தீக்காயங்களுக்குள்ளான  அவர், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளாரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .