2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சம்பள நிலுவை வழங்காமைக்கு கடதாசி ஆலை ஊழியர்கள் கண்டனம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 14 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

 

வாழைச்சேனைக் கடதாசி ஆலையில்  கடமையாற்றிவந்த நிலையில், சுயவிருப்பின் பேரில் பணியிலிருந்து விலகிய ஊழியர்கள், தங்களுக்குச் சம்பள நிலுவை வழங்கப்படாமையைக் கண்டித்து, எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆலையின் நுழைவாயிலுக்கு முன்பாக இன்று அந்த ஊழியர்கள் ஒன்றுகூடி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியிலிருந்து விலகிய ஊழியர்கள் 154 பேருக்கு சம்பள நிலுவை வழங்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டில் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான சம்பள நிலுவையே தங்களுக்கு வழங்கப்படவில்லை என, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.  

இந்நிலையில், குறித்த இடத்துக்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின்  கல்குடா தொகுதி அமைப்பாளர் எஸ்.ஜெகன், அந்த ஊழியர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்துகொண்டார்.

இந்த சம்பள நிலுவைப் பிரச்சினை தொடர்பில் வாழைச்சேனை முகாமையாளர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைப்பாளர் கலந்துரையாடினார்.

இந்நிலையில், இரண்டு வார காலத்துக்குள் சம்பள நிலுவையை பெற்றுத் தருவதாக, ஊழியர்களுக்கு முகாமையாளர் வாக்குறுதி வழங்கியமையை அடுத்து, அந்த ஊழியர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X