Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
இலங்கையில் சஹ்ரானின் மத பயங்கரவாதம் இப்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பாக உருவாகி உள்ளதுடன் கிழக்கில் மத ரீதியான குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா முயற்சிக்கின்றாரா? இந்த மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற சமத்துவமான ஒரு மாகாணம் ஆகவே மத ரீதியான ஒரு மாகாணத்தைப் பிரிக்க ஒரு போதும் விடமாட்டோம் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சிவதர்சன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் குண்டு வெடித்த இடத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில், கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பாரிய தீவிரவாத தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இது ஒரு வேதனையான விஷயம் என்பதுடன் உலகளாவிய ரீதியில் ஒரு துன்பகரமானது.
உண்மையில் ஒரு வேதனையான நாட்களை கடந்து செல்கின்றோம் இந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலின் சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் இந்த இடத்தில் வர்ணிக்கப்பட்டு இரத்த ஆறுகளாக ஓடுகின்ற போது அதைப் பார்த்து ரசிக்க கூடிய ஒரு தீவிரவாத செயலாக கருதுகின்றோம்.
இதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கண்ணீரோடு இதை ஒவ்வொரு நிமிடங்களும் கடந்து செல்கின்றோம். வருடத்தில் ஒரு முறை இந்த நினை வேந்தலை செய்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு நாளும்மிகவும் வேதனையுடன் கண்ணீருடன் நாட்களை கடந்து செல்கின்றனர் .
சொந்த பிள்ளையை கண்முன்னே மரணித்த கொடூரமான செயற்பாட்டை காணக்கூடியதாக இருந்தது எனவே இவ்வாறான ஒரு மத தீவிரவாதம் திட்டமிட்டு செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்து உயிர்த்த ஞாயிறு படுகொலை தொடர்பான சூத்திரதாரிகள் யார் என ஜனாதிபதி 21ம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கூறிய வார்த்தைகளை நம்புகின்றோம். ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலையின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவன் மரணத்திற்கு முன்னர் கூறிய விடயம் அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஹாபீர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் நாங்கள் மரணித்தாலும் இதை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிம்களும் ஹாபீர்களை கொலை செய்ய வேண்டும் என இந்த விடயம் தவறானது இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதேவேளை அந்த சஹ்ரானின் கடும் போக்குவாத சிந்தனையுடன் தற்போது சூப்பர் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ளது எனவே இந்த ஜ.எஸ்.ஜ.எஸ் குண்டு வெடிப்புக்குப் பின்னர் நாங்கள் தொடர்ந்து ஒரு அச்சமான சூழலில் இருக்கிறோம் மீண்டும் நாங்கள் மரணிப்பதற்கு தயார் இல்லை. எனவே இந்த மத பயங்;கரவாதத்துக்கு எதிராக அரசாங்க பாதுகாப்பு படை செயல்பட வேண்டும்.
எங்கேயோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் இஸ்லாமிய சமூகத்தை சுட்டு கொன்றார் என்பதற்காக இலங்கை நாட்டில் அப்பாவி குழந்தைகளையும் மக்களையும் கொலை செய்துள்ளனர்
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இது முஸ்லிம்களின் தாயகம் என்கிறார். கிழக்கில் மதரீதியான ஒரு தாயத்தை உண்டாக முயற்சிக்கின்றாரா ? குட்டி பாகிஸ்தான் போல உருவாக்க நினைக்கின்றாரா? அதை கடைசி வரைக்கும் விடமாட்டோம் இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழுகின்ற சமத்துவமான ஒரு மாகாணம் எனவே மதரீதியாக மாகாணத்தைப் பிரிக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே பாதிக்கப்பட்ட சமூகம் என்ற ரீதியில் மனவேதனையுடன் சொல்லுகின்றோம். நாங்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளோம் இது மன்னிக்க முடியாத விடயம் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை கொடு என யேசுநாதர் சொல்லியுள்ளார் ஆனால் ?அறைய வந்தால் கன்னத்தை கொடுத்திருப்போம் அவர்கள் குண்டுடன் கொல்ல வந்தார்கள். என தெரியாது. எனவே, மீண்டும் எமது சந்ததியை அழிக்க தயார் இல்லை
ஆகவே ஜனாதிபதி தேர்தலின் போது கூறியதை நிறைவேற்ற வேண்டும் உண்மையான சூத்திரதாரி யார் என கைது செய்து தீர்வை பெற்று தர வேண்டும் இதை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றார்.
27 minute ago
34 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
48 minute ago