2025 மே 14, புதன்கிழமை

சாய்ப்புச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் வர்த்தக நிலையங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சாய்ப்புச் சட்டம், ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நத்தார், புதுவருடப் பிறப்பு பண்டிகை, தைப்பொங்கல் பண்டிகைகளை கருத்திற்கொண்டு, சகல வியாபார நிலையங்களும் 15.12.2018ஆம் திகதி தொடக்கம் 15.01.2019ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனை சகல வர்த்தக நிலைய உரிமையாளர்களது கவனத்துக்கும் கொண்டுவரும் பொருட்டுக, வர்த்தக சங்கத் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சாய்ப்புச் சட்ட நடைமுறை, மீண்டும் எதிர்வரும் 16.01.2019ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமெனவும் மேயர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .