Editorial / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , ஜவ்பர்கான்
சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் நேற்று (23) நடைபெற்றது.
கொவிட் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதி விருதைப் பொற தகுதியுடைய நாடு பூராகவும் உள்ள அனைத்து சாரணர்களையும் ஒரே இடத்துக்கு அழைக்க முடியாத காரணத்தால், குறித்த நிகழ்வானது நிகழ்நிலை (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து சாரணர்களையும் ஒருமித்து நடைபெற்றிருந்தது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 44 சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (23) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்டச் செயலாளருமான கே.கருணாகரனும் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவுளியூ.ஜீ.திசாநாயக்கா கலந்துகொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 2022ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட ஆண் சாரணர்களும், பெண் சாரணர்களுமாக மொத்தமாக 44 பேர் ஜனாதிபதி சாரண விருது பெற்றிருந்தார்கள். இவர்களுக்கான ஜனாதிபதி சாரண விருது அதிதிகளால் அணிவிக்கப்பட்டது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .