2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சி.வி - மக்கள் சந்திப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 20 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில், நேற்று (19) மாலை, மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

தளவாய் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பிரதேசத்தின் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியின் செயற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், செங்கலடி பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

தமிழ் மக்கள் கூட்டணியின் உபதலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான சோமசுந்தரம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வசந்தராஜா, வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அருந்தவபாலன் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X