2025 மே 01, வியாழக்கிழமை

சிறார்களை ஆற்றுப்படுத்தல் செயற்றிட்டம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பில் சிறார்களை ஆற்றுப்படுத்துவதற்கும் அவர்களது அறிவு ஆற்றல் செயற்திறனை வளர்ப்பதற்குமான செயற்றிட்டத்துக்கு ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா, மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு நூல் தொகுதி வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வு, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் இன்று (23) நடைபெற்றது.

 கொரோனா வைரஸ் பரவல் காலங்களில், பாடசாலை செல்லாமல் வீடுகளிலும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ள சிறார்களின் அறிவு திறன் மனப்பாங்கு என்பவற்றை முன்னெடுப்பதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே இந்த வேலைத்திட்டத்தை தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .