2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிறுபோக நெல் அறுவடை துரிதம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022 சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் தற்பொழுது துரிதமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

இம் மாவட் டத்தில் உள்ள 16 கமநல சேவை கேந்திர நிலையை பிரிவுகளில் சுமார் 32,260 ஹெக்டேரில் நெற் செய்கை பண்ணப்பட்டதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் கே.ஜெகன்நாத் தெரிவித்தார்.

அறுவடைக் காலம் தொடங்கியுள்ள போதிலும் அறுவடைக்குத் தேவையான எரிபொருளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்ததனால் குறித்த வேளைக்கு தமது நெல்லை அறுவடை செய்வதற்கு வசதி கிட்டியதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

அதேவேளை, எதிர்வரும், பெரும்போக நெல் செய்கையின் போது தேவையான யூரியா உட்பட சகல வசதிகளையும் பெற்றுத் தருவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X