Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 நவம்பர் 11 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆறாம் குறிச்சிப் பகுதியில், தனது கணவரின் முதல்தாரத்தின் மகனை, கரண்டியால் சூடு வைத்த குற்றச்சாட்டில், பெண்ணொருவர், நேற்று (10) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 4இல் கல்வி கற்கும் சிறுவனே, இவ்வாறு சூட்டுச் சம்பவத்துக்கு இலக்காகியுள்ளான்.
குறித்த சிறுவனின் தந்தை, தனது முதல் மனைவி மூலம் கிடைத்த மகனை, இரண்டாவது மனைவியின் பராமரிப்பில் ஒப்படைத்துவிட்டு, மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்புரிந்து வரும் நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் கைப் பகுதியில் காயங்கள் காணப்படுவதுடன், காதுப் பகுதியிலும் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுவன் கல்வி கற்கும் பாடசாலைக்குத் தெரியவரவே, பாடசாலையின் மூலமாக, காத்தான்குடிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட காத்தான்குடிப் பொலிஸார், அப்பெண்ணைக் கைதுசெய்துள்ளதுடன், மாணவனை, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025