2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் விடுதி புதிய கட்டடத்துக்கு மாற்றம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதி, நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கு இன்று  மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் புதிய கட்டடத்திலேயே சிறுவர் விடுதி இயங்கவுள்ளது.

இதேவேளை, இந்தப் புதிய கட்டடத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவப் பிரிவுக்கான குழந்தை வைத்திய விடுதியும் இயங்கவுள்ளது என,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப்; பணிப்பாளர், டொக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

இந்தப் புதிய கட்டடமானது, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 200 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதுவரைகாலமும் சிறுவர் விடுதியானது,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 33ஆம் இலக்க விடுதியில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய கட்டடத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், டொக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையும் கிழக்குப்  பல்கலைக்கழக பிரதி உபவேந்தர், டொக்டர் கே.இ.கருணாகரனும் இணைந்து திறந்து வைத்தனர்.

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X