Princiya Dixci / 2021 ஜூன் 27 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
“மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்துக்கு சேதனப் பசளை மற்றும் காய்கறி உற்பத்திகள்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சிறைக் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள், மட்டக்களப்பில் நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டன.
சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தலைமையில், மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறையிலுள்ள 23 ஏக்கர் பண்ணையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவின் பங்குற்றலுடன், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
“இன்னும் 10 வருடங்களுக்கு நாங்கள் இரசாயனப் பசளைகளை உபயோகித்தோமானால் எங்களுக்குப் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். இந்த நாட்டில் ஆரம்பத்தில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை தான் இருந்தது. எனினும், தற்போது பல புற்றுநோய் வைத்தியசாலைகள் இயங்குகின்றன.
“அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது சிறுநீரக பிரிவுள்ளது. இதற்கெல்லாம் காரணம் நாங்கள் இரசாயனப் பசளைகளை உபயோகித்ததுதான். “ஆகவே, இதனை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முடிவு செய்ததே உங்களுக்காகத்தான்” என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .