2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிவப்பு வலயமாக மட்டக்களப்பு அடையாளம்

Princiya Dixci   / 2021 மே 18 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூரதீன்

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இரு மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்புக் காரணமாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படுவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

கல்லடி வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளும் தற்போது சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 1,516 தொற்றாளர்கள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 21 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனாவின் 3ஆவது அலையில் 533 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 12 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன், சுகாதார நடைமுறைகளைப் பேணவும் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X