2025 மே 21, புதன்கிழமை

சிவாஞ்சலி கலைக் கூடத்தின் ’பரதலய சங்கமம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொம்மாதுறை சிவாஞ்சலி கலைக் கூடத்தின் 12ஆவது வருட நிறைவையிட்டு, சிறப்பு நிகழ்வாக, 'பரதலய சங்கமம்' எனும் நாட்டிய அரங்கேற்றம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக, ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் 'பரதலய சங்கமம்' நிகழ்வில், இளம் கலைஞர்கள் பங்கு கொள்ளும் சுமார் 10 நாட்டியங்கள் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் ழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், இன்னும் பல நாட்டிய கலைஞர்கள், அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

பொது அழைப்பின் பிரகாரம் ஆர்வமுள்ள கலைஞர்கள் இந்த 'பரதயலய சங்கம' நிகழ்வுக்கு அழைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு மேலும் தெரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .