2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே புதிய ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 02 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிவில் சமூகத்தைச் சேர்ந்த மற்றும்; அனைத்துச் சமூகங்களையும் அரவணைத்துப் பாராபட்சமின்றி ஆளுகை செய்யக்கூடிய ஒருவரே, கிழக்கு மாகாணத்துக்குப் புதிய ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என, அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக இதுவரைகாலமும்  பணியாற்றிவந்த ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளராக  செவ்வாய் (4)  நியமனம் பெறவுள்ள நிலையில், அம்மாகாணத்தில் ஆளுநர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இம்மாகாணத்துக்குரிய புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி தம்முடன் தொடர்பிலுள்ளார். அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும்; கிழக்கு மாகாணத்துக்குப் புதிய ஆளுரை நியமிப்பது தொடர்பில் கருத்துப் பரிமாற்றத்தில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

சிறந்த ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும்போதே, இம்மாகாணத்தில் இதுவரைகாலமும் கட்டியெழுப்பப்பட்ட நல்லாட்சியின் பலாபலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்.

இம்மாகாண சபையைத் தாம்  பொறுப்பெடுத்ததிலிருந்து இதுவரைகாலமும் முன்மாதிரியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் மூவின மக்களும் இணைந்து தேசிய இன ஐக்கியத்துக்கும்; நல்லாட்சிக்கும் அர்த்தம் கற்பித்து ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

எனவே, புதிய ஆளுநரின் வருகையாலும், கிழக்கு மாகாணசபையில் நல்லாட்சி மேலும் அர்த்தபுஷ்டியாக மாற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X