Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூலை 18 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, குடும்பிமலையில், கரும்புச் செய்கைக்காக சீன அரச நிறுவனத்துக்குக் காணி வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு , குடும்பிமலையில் குறித்த காணியை வழங்குவதற்காக, இலங்கை அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில், இரகசிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலைமையிலேயே, இது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமாருக்கு, கடிதமொன்றை இன்று (18) அனுப்பிவைத்த யோகேஸ்வரன் எம்.பி, இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவை மையமாகக் கொண்டதான குடும்பிமலை பகுதியை அண்மித்து, 68,250 ஹெக்டேயர் காணியை, இலங்கை அரசாங்கம், யாருக்கும் தெரியாமல் சீன அரசாங்க நிறுவனமொன்றுக்குக் கரும்புச் செய்கைக்கு வழங்க, இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சில ஆதாரங்களுடன் அறிந்துள்ளேன்.
“இத்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்த அனுமதிக்க முடியாது. இத்திட்டம் சார்பாக ஆராயும் முகமாக, அண்மையில் வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இச்செயற்பாடு சார்பாக ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடித்தின் பிரதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
13 minute ago
17 minute ago
23 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
23 minute ago
43 minute ago