Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று (29) விஜயம் மேற்கொண்ட ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி, 2019 ஏப்ரல் 21 குண்டுதாக்குதலால் சேதமடைந்த சீயோன் தேவாலயக் கட்டடங்களையும் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிட நிர்மாணத்தையும் பார்வையிட்டதுடன், குண்டுத் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இவ்வாறான அசம்பாவிதங்கள் இனிமேல் உருவாகாமல் தடுக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, மட்டக்களப்பு மாநகர சபையில், மேஜர் ரி.சரவணபவனுடனான ஜப்பான் தூதுவரின் சந்திப்பும் நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி, அபிவிருத்திக்கு சவாலக இருக்கின்ற விடயங்கள், வளபற்றாக்குறை, தேவையான விடயங்கள் தொடர்பாக தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
கழிவு அகற்றல் செயற்பாடு, தீயணைப்பு பிரிவைப் பலப்படுத்துதல் ஆகியனவற்றுக்கு ஜப்பான் உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் பின்னர், திண்ணமக்கழிவு அகற்றலுக்கான வாகன வசதி, தீயணைப்புப் பிரிவுக்கான வசதிகள், ஜப்பானிய தூதரகத்தினூடாக சமூக அபிவிருத்தித் திட்டத்துக்காக எங்களுடன் சேர்ந்து இயங்குவதாக தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என மட்டக்களப்பு மாநகர சபை மேஜர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago