Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 03 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வுகளின் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்று, மட்டக்களப்புக்கு நேற்று (02) மாலை விஜயம் செய்தது.
அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உட்பட ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழுவினரே, மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவடிவேம்பு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு ஆகிய இடங்களுக்கு அமைச்சர்கள் சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து, மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் செங்கலடியிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், “வரலாற்றில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் மே தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறுவது இதுவே முதல் தடைவையாகும்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிக்கு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் வாக்களித்து, வெற்றி பெறச் செய்தமையையொட்டி, தேசிய மே தினத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மட்டக்களப்பில் செங்கலடி, மாவடிவேம்பு பிரதேசத்தில் நடத்த தீர்மானித்துள்ளது” என்றார்.
இந்த மே தின நிகழ்வில், நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 25,000க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
17 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
4 hours ago