2025 மே 21, புதன்கிழமை

சுகாதார ஊழியரைத் தாக்கியவர் கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர் ஒருவரை, நேற்று (21) மாலை தாக்கியதாகக் கூறப்படும் நபரொருவரைக் கைதுசெய்துள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வி.ஜெயராஜ் என்ற இந்த ஊழியர், மட்டக்களப்பு திருப்பெருந்துறையிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திலிருந்து கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, திருப்பெருந்துறையில் வைத்து வழி மறித்துத் தாக்கப்பட்டுள்ளார்.

காயங்களுக்குள்ளான இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரை, மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .