2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கிழக்கு விஜயம்

Editorial   / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எம்.எம்.அஹமட் அனாம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்த்தன, காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று(16) விஜயம் செய்தார்.

இதன்போது, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருந்துக் களஞ்சியசாலையையும் அவர் திறந்து வைத்தார்.

அத்துடன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்ட வைத்தியாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

“ஒமிக்ரான் தொற்றிலிருந்தும் நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்த்தன இதன்போது தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் என். மயூரன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X