2025 மே 23, வெள்ளிக்கிழமை

சுதந்திரக் கட்சி அலுவலகங்கள் திறப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான் 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு, கல்குடா மற்றும் மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளில் கிராமங்கள் தோறும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருவதாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் தெரிவித்தார். 

இத்திட்டத்துக்கு அமைய, மட்டக்களப்பு அமிர்தகழி கிராமத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் நேற்று (13) திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமிர்தகழி அமைப்பாளர் குணரத்தினம் திருமால் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X