2025 மே 22, வியாழக்கிழமை

சுத்திகரிப்புப் பணியில் 100 சுத்திகரிப்பாளர்கள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு  மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் வியாழக்கிழமை தொடக்கம், நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் சுமார் 100 பேர்,  12 மணித்தியாலக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென, மாநகர ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாநகரக் கழிவுகளை, திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டுவதற்கு, நீதவான் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், புதன்கிழமை நீக்கியதையடுத்து, இந்த துரிதத்துப்புரவுப் பணிகள் நகரெங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“எமது மாநகர ஊழியர்கள், அர்ப்பணிப்புடன் உள்ளார்கள். வழமையாகக் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை கடமை புரியும் ஊழியர்கள், தற்போதைய அவசர சூழ்நிலை காரணமாக, காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடமை புரிகின்றனர்.

“இதற்கென மேலதிக நேர ஊதியத்தையும் அவர்கள் பெறுவார்கள்.

“தேங்கிக் கிடக்கும் மாநகரக் கழிவுகள் பூரணமாக சுத்தம்  செய்யப்படும் வரை இப்பணி தொடரும்.

“அதுபோல மட்டக்களப்பு மாநகரப் பிரிவுக்குள் வாழும் மக்களும் வரியிறுப்பாளர்களும் கடந்த சுமார் ஒரு மாதகாலமாகப் பல்வேறு அசௌகரியங்களுடன் பொறுமையாக தமது இயல்பு நிலையைக் கடைப்பிடித்து வந்தனர்.

“மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், இடைக்காலத் தடை உத்தரவை நீக்கியது மட்டக்களப்பு மாநகர மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

“தொடர்ந்தும் எத்தகைய இடைஞ்சல்கள் தடைகள் வந்தாலும் நகரைத் துப்புரவாக வைத்திருப்பதில் பூரண ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் மக்கள், மாநகரசபைக்குத் தரவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .