2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சுபைர் ஹாஜியார் வீதி கையளிக்கப்பட்டது

பேரின்பராஜா சபேஷ்   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - ஏறாவூர் நகரின் குடியேற்றக் கிராமமான அப்துல் மஜீத் மாவத்தையில், 10 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட புதிய வீதியான சுபைர் ஹாஜியார் வீதி, பொதுமக்களின் பாவனைக்காகக்  கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பங்களுக்கென சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இக்கிராமம் உருவாக்கப்பட்டபோதிலும், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றிக் காணப்பட்டதால், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், இங்கு வீதியை அமைப்பதற்கான நிதியை  ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X