2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘சுமைதாங்கியடியை விடுவிக்கவும்’

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 26 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, விமான நிலையத்துக்குள் சிக்கியுள்ள வலையிறவு, சுமைதாங்கியடி பிரதான வீதியை, மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விமானப்படை முகாம் அமைக்கப்பட்டபோது, குறித்த பகுதியில் பொதுமக்களின் காணிகளும் வவுணதீவு பிரதேசத்துக்குச் செல்லும் பிரதான வீதியும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் ஐந்து கிலோமீற்றர் வீதியை சுற்றியே வலையிறவு பாலம் ஊடாக வவுணதீவைச் சென்றடைய முடியும். ஆனால், இப்பிரதான வீதி திறந்துவிடப்படுமானால், தமது பிரதேசத்தில் இருந்து 500 மீற்றர் மட்டுமே பயணித்து இலகுவில் வந்துசெல்ல முடியும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த  அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, குறித்த வீதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் கலந்துரையாடி தீர்மானமொன்றை நிறைவேற்றி, தனக்கு அனுப்பிவைத்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X