2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சுற்றாடல் அதிகாரிகள் காத்தான்குடிக்கு விஜயம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கையை, ஜப்பான் நாட்டு ஜெய்க்கா நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகள், நேற்று(21) பார்வையிட்டனர்.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் அழைப்பின் பேரில், ஜப்பான் நாட்டு ஜெய்க்கா நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் காத்தான்குடிக்கு விஜயம் செய்து, காத்தான்குடி நகர சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் திண்மக்கழிவு முகாமைத்துவம், மீள் சுழற்சி நிலையம், பசளை தயாரிக்கும் இடம் ஆகியவற்கைப் பார்வையிட்டனர்.

இதனையடுத்து, ஜெய்க்கா நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகளுக்கும் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு மிடையிலான கலந்துரையாடலொன்று, நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, காதான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவகற்றலிலுள்ள சவால்கள், அதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் நகர சபைத் தவிசாளர், ஜெய்க்கா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்.

ஒரு வருடகாலத்துக்கு, காத்தான்குடியில் காணப்படும் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X