Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“காணி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அரச காணிகளில் ஆவணமற்ற ரீதியில், பயன்பாட்டுக்கு உட்படுத்தி வரும் மக்களுக்கு அதிக பயன்தரக் கூடியது” என மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - தன்னாமுனை மியானி பயிற்சிக் கூடத்தில், சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே. முத்துலிங்கம் தலைமையில் இன்று (17) நடைபெற்ற 3 நாள் வதிவிடக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில், அவர் அதிதியாகக் கலநது கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சட்டத்தரணி மயூரி, “தற்போது நாட்டின் நடைமுறைகள் சட்டதிட்டங்கள் எல்லாமே துரித கதியில் மாற்றம்மடைந்து கொண்டு வருவதால், பெதுமக்களும் அந்த நடைமுறைகளுக்கேற்ற வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினர்.
2020 செப்டெம்பர் 10ஆம் திகதி காணி அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம், காணியற்ற மக்களுக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது என அவர் கூறினார்.
“அதாவது, அரச காணிகளில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் குடியிருந்து, அபிவிருத்தி செய்து, பயன்பாட்டுக்கு வைத்திருப்பவர்களுக்கு அது நன்மை தரக் கூடியது.
“1292/36ஆம் இலக்கத்தில் காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நவம்பர் மாதத்துக்கு முன்னராக காணிக் கச்சேரியை வைத்து, மக்களது காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“இந்த அரிய சந்தர்ப்பத்தை, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி, தங்களது காணிக்கான உரித்தாவணம் இல்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago