Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
“சட்டத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இயங்கவேண்டும். எனினும், ஜனாதிபதியால் தற்போது வெளியிடப்படும் சுற்றுநிரூபங்கள் சட்ட அந்தஸ்த்தை பெற்றவை அல்ல” என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று (25) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அவசரகாலச் சட்டமும் சட்ட வலுவற்றதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தின் மூலம் இன்று அனைத்து அறிவுப்புகளும் வெளிவருகின்றன. இது ஒரு சிவப்பு எச்சரிக்கையென்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், கொரோனா தொடர்பான எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத் தொற்றுநோய் எச்சரிக்கை இருக்கையில் இவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது என்று வேட்புமனுத் தாக்கலின் போது எங்கள் கருத்துகளை நாங்கள் வெளியிட்டிருந்தோம்.
“தற்போதையை நிலையில், 03 மாத காலத்துக்குள் தேர்தலை நடத்தி நாடாளுமன்றத்தைக் கூட்டுகின்ற விடயம் அசாத்தியமானதாகவே இருக்கின்றது.
“ஜுன் 02 உடன் மூன்று மாதங்கள் முடிகின்றது. ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஜுன் 20 வரை ஒத்தி வைத்திருக்கின்றது. இவ்வாறு ஜுன் 20 வரை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எங்கிருந்து அதிகாரத்தைப் பெறுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.
“இதற்கும் மேலதிகமாக ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனமும் ஜுன் 02ம் திகதியுடன் அரசமைப்புச் சட்டத்தின் பிரகாரம் சட்டவலுவை இழக்கின்றது. இவ்வாறு ஜனாதிபதியின் பிரகடணம் மூன்று மாதங்களின் பின்னர் வலிதிழக்கின்றது என்றால் ஏற்கனவே இருந்த பழைய நிலைமைக்கு நாடு செல்ல வேண்டும்.
“அவ்வாறு நாடு செல்வதென்றால் பழைய பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். இது அரசமைப்புச் சட்டத்தின் படியான நிலைமை.
“தற்போதிருக்கின்ற நிலைமையை அனுசரித்துத் தேர்தலை முடித்துக் கொள்ள முடியாத நிலையிலே மீளவும் நாடாளுமன்றம் அழைக்கப்படலாம். ஏனெனில், இது தற்போது தேவைப்பாடானதாக இருக்கின்றது.
“தற்போதைய நிலையில் அவசரகாலச் சட்டம் என்று சொல்லப்படுவதும் ஒரு வலிதற்ற சட்டமாகவே இருக்கின்றது. அதேவேளை, தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் பிரகடனமும் 03 மாதத்தின் பின் வலுவற்றதாக மாறும்.
“தற்போது வெளிவருகின்ற ஒவ்வொரு அறிவித்தல்களும் ஒவ்வொரு துறைகளிலும் ஜனாதிபதியால் நியமிக்கபபட்ட இராணுவ அதிகாரிகளால் தான் வெளிவருகின்றன.
“சுகாதாரம் உட்பட பல அறிவித்தல்களை முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகளே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயக நடைறைக்கு மிகவும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“ஜனாதிபதியுடன் இருக்கின்ற சட்டவல்லுனர்கள் மற்றும் வியத்கம செயற்குழுவில் உள்ளவர்களும் தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கு முறையான சட்ட ஆலோசனையை வழங்க முடியாதவர்களாக இருக்கின்றார்களோ தெரியவில்லை.
“சுகாதார அமைச்சர், பொறுப்பற்ற விதத்திலே சொல்லுகின்றாரா அல்லது அவரும் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியிலே கதைக்கின்றாரா என்பது தொடர்பில் தெரியவில்லை. ஆனால், ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். எனவே, அதிகாரத்தில் உள்ளவர்கள், பொறுப்பு வாய்ந்தவர்கள் இவ்வாறு அடிக்கடி கருத்துகளை மாற்றிக் கொள்ளக் கூடாது.
“கொரோனா தொடர்பில், இராணுவ அதிகாரிகளோ, தேர்தல்கள் ஆணைக்குழுவோ தீர்மானங்களை எடுக்க முடியாது. நிபுணர்களே இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“ஒட்டு மொத்தமாக எல்லா இடங்களிலும் இராணுவ உயர் அதிகாரிகளை வைத்துக் கொண்டே இந்த அரசாங்கம் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
“எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புள்ள கட்சி என்ற வகையில், தற்போதுள்ள சூழ்நிலையிலே மக்களை வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கேட்முடியாத நிலையிலே இருக்கின்றோம் என்ற விடயத்தைப் பகிரங்கமாகச் சொல்லி வைக்கின்றோம்” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago