Editorial / 2021 ஜூன் 23 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் இன்று (23) பிற்பகல் 3 மணிக்கு குதித்த இளைஞனை, வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
களுவாவளை 4ஆம் சிறி முத்துமாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த 32 வயது இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன், தான் கொண்டுவந்த பை மற்றும் செருப்பு ஆகியனவற்றை, பாலத்தின் மேல் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளார்.
இதனை, அப்பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு, உடனடியாக வாவியில் குதித்து இளைஞனைக் காப்பாறிக் கரைசேர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பான விசாணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago