Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஆர்.ஜெயஸ்ரீராம் / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மாமாங்கம், இரண்டாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடிகாண் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2010ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த வடிகாண் சேதமடைந்து காணப்படுவதால், வீதிப் போக்குவரத்துப் பிரச்சினைகள் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் செல்லும் பயணிகள் வடிகாணுக்குள் விழுந்து காயங்களுக்கு உள்ளாகுவதுடன், மழை காலங்களில் நீர் வீதிகளில் தேங்கிக் காணப்படுவதால் வீதிகளும் பாதிப்படைகின்றன.
இவ்விடயமாக மாநகர சபையில் பல முறை எழுத்து மூலம் கடிதம் வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
மிக விரைவில் இவ்வடிகாணை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு, மக்கள் மேலும் கோரி நிற்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
59 minute ago
1 hours ago