Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 நவம்பர் 21 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 29 வயது இளைஞனை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழைச்சேனையைச் சேர்ந்த மேற்படி இளைஞனிடமிருந்து 08 சைக்கிள்களும், ஏறாவூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனையிலிருந்து பஸ்ஸில் வரும் இந்த இளைஞன், சுமார் இரண்டு மாத காலத்தில், ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளார்.
இவ்வாறு திருடிச் சென்ற சைக்கிள்களில் சிலவற்றை வாழைச்சேனையில் விற்பனை செய்துள்ளார் என்றும் சில சைக்கிள்களை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞனை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.பி.ஜி.ஜி.எஸ். சத்துரங்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago