2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஜனாதிபதியின் கொள்கை தோற்றுப்போகாது’

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கொள்கையை தோற்றுப்போன கொள்கையாக காட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த முயற்சிகளை ஒருபோதும் வெற்றியளிக்கவிடமாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்த லைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் நடந்துகொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அவ்வாறான செயற்பாட்டை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த நாட்டை பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரை கொரோனா தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தல்கள், நாடு முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் தான் இந்த நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

“நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, கொவிட் காரணமாக மக்களுக்குப் பஞ்சம் இருக்கின்றபோது ஏன் நகர அபிவிருத்தி திட்டத்தில் இதனை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற விமர்சனங்கள்கூட வந்திருக்கின்றன.

“சுபீட்சத்தின் நோக்கு என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு ஓர் அரசாங்கம் என்ற அடிப்படையிலே எங்களுக்கு இருக்கின்றது.

“அதனை நிறைவேற்றும் நோக்கத்தில் நாங்களும் அதிகாரிகளும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அதற்கு கொவிட் தடையாக இருக்காது என நாங்கள் நம்புகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .