2025 மே 19, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் பதிலில் மகிழ்ச்சி

வா.கிருஸ்ணா   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலையற்ற பட்டதாரிகளின் வரலாற்றில் மகஜரொன்று, ஜனாதிபதி ஒருவரிடம் கையளிக்கப்பட்டு, அதற்கான பதில் உடனடியாக வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்தது.

மட்டக்களப்புக்கு சனிக்கிழமை (03)காலை வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அன்றையதினம் வேலையற்ற பட்டதாரிகளினால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, கூட்டத்தில் உரையாற்றிய போது, மகஜர் குறித்துப் பேசியதுடன், அந்த மகஜரில் குறிப்பிட்ட விடயங்களுக்குத் தீர்வை அறிவித்தார்.

இது தொடர்பில் காந்தி பூங்காவில் கூடிய பட்டதாரிகள், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

மேலும், இது பட்டதாரிகளின் போராட்டத்துக்குக் கிடைத்தவெற்றியெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன், இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X