2025 மே 01, வியாழக்கிழமை

‘ஜனாதிபதியின் வழிநடத்தலில் நல்ல மாற்றங்கள்’

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரச நிர்வாகத்தின் கீழ், நல்ல பல விடயங்கள் நடப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் இன்று (16) நடைபெற்ற அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “நாட்டிலே அரசியல் ரீதியாகப் பல விடயங்கள் நடந்து வருகின்றன. அத்தோடு, நல்ல மாற்றங்களும் இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு விடயத்திலே, ஜனாதிபதி அர்ப்பணிப்போடு தொடங்கியுள்ள வேலைத் திட்டத்தை முழு மனதோடு வரவேற்றாக வேண்டும்” என்றார்.

“பாதாள உலகக் கோஷ்டிகள் நசுக்கப்படுகிறார்கள். இதற்கு எமது பூரண ஒத்துழைப்பையும் அரசாங்கத்துக்கான ஆதரவையும் வழங்க வேண்டும். அதேபோன்று, அரசாங்கப் பணிமனைகள் இயங்குகின்ற விடங்களும் நல்ல மாற்றம் கண்டுள்ளன.

“அதிகாரப் பகிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற விடயங்களில் அரசாங்கம் ஈடுபடாமல், ஏற்கெனவே இருக்கின்ற மாகாண சபை நிர்வாகத்தைப் பலப்படுத்துவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

“அவ்வாறு செயற்படுகின்ற போது, சிறுபான்மை மக்களினதும் நம்பிக்கையை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பெற்றுக் கொள்ளலாம். இதனூடாக இந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .