Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 27 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் அனர்த்த குறைப்பு செயற்றிட்டத்தின் கீழ், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
இதன்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி, மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கே.ரமேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நீர்த்தேங்கும் இடங்கள் மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், வீடுகளும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .